மதியம் புதன், ஆகஸ்ட் 15, 2007

ஒரு கம்யூனிஸ்டாயிருப்பதன் அர்த்தம்







உனக்கு அவன் உவப்பாயில்லாதிருக்கலாம்.
சமயங்களில் எப்படியாவது அவன்
கண்டுபிடித்துவிடுகிறான்
இருட்டுமூலையில் நீ
தொலைத்த மனசாட்சியை.
அவனது கேள்விகள்
உன் கழுத்துக்குக் கீழே
நீள்வதும் உனக்கு எரிச்சலையூட்டலாம்.
எனக்கும் அவனோடு
கைகுலுக்குவதில் தயக்கமிருக்கலாம்.
ஆனால் அவனது நீட்டிய
கரங்கள் எதற்கானவை
என்ற சந்தேகமில்லை
என்னிடம்.
அவன் ஒரு கம்யூனிஸ்ட்.
கம்யூனிஸ்டாயிருப்பதன் அர்த்தம்
மனிதனாயிருப்பதன் அர்த்தம்தான்.
உன்னையும் என்ன்னையும் புறக்கணித்துச்
செல்லும் குரல்கள்
உரக்க இல்லை என்றாலும்கூட
சன்னமாகவேனும்
என் மனசைத் தொட்டு
மீண்டு எதிரொலிக்கிறது,
'கஷ்டஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட் ஹம்
ரா ஹம்ரா கம்யூனிஸ்ட்'.

3 comments:

Anonymous said...

i can understand

- kundalan

thiagu1973 said...

நல்ல ஒரு கவிதை தந்தமைக்கு நன்றி தோழர்

நட்புடன்

சின்னக்குட்டி said...

கவிதைகளை பொதுவாக ரசிக்க தெரியவில்லையோ... என்னவோ யாருடைய கவிதைகளும் இலகுவில் புரிவதில்லை... ஆனால் இந்த கவிதை மட்டும் நன்றாக விளங்குகிறது நன்றிகள்