புவனேஸ்வரி என்னும் விலைநிலக்குறிப்பு




புவனேஸ்வரியின் தேகம் உலர்ந்தது
வறண்ட நிலம்.
முதலில் புவனேஸ்வரியிடம் வந்தது சங்கரன் அய்யர்.
எல்லாம் களைந்தபின்னும்
முதுகில் புரண்டு சிரித்தது பூணூல்.
இரண்டாவதாய் வந்தவன் ஷ்யாம், கணிணி நிபுணன்.
அவனது புணர்தல்
கம்யூட்டர் புரோகிராமிங் போலவே இருந்ததாய்ப்
புவனேஸ்வரி சொல்லியிருந்தாள்.
கடைசியாய் வந்த கவிஞனோ
போதியின் மிகுதியால் புணராமலே
படுத்து உறங்கியபோதுதான்
தெற்குமூலையில்
ஒரு குழந்தையின் ஆர்வத்தோடும்
பூ மலர்வது போலவும்
குண்டு வெடித்துச் சிரித்தது.
இப்போது சங்கரனில்லை
ஷ்யாமும் கவிஞனுமில்லை.
சங்கரன், ஷ்யாம், கவிஞனுக்கிடையில்
இடைப்பட்ட நேரத்தில்
கடவுளும் வந்துபோனதாய்ச் சொன்னது
புவனேஸ்வரியின் பிரேத அறிக்கை.

1 comments:

Anonymous said...

ஆதிக்கவாதி, படிப்புத்திமிராளி, அறிவுசீவி, ஆகியோருடன் மதமும் பெண்மையை பாழ்படுத்துவதாகச் சொல்ல வருகிறீர்களா?