சாத்தியங்களின் மரணம்



சாத்தப்பட்டுக்கிடக்கின்றன கதவுகள்.

ஒலியெழுப்பி உரக்கத்தட்டாதிருக்கட்டும் உங்கள் கரங்கள்.

ஏற்கனவே தென்றலொன்றுநுழைந்ததன்

சாட்சியமாய்ப்பூவொன்று

கலைத்துப் போடப்பட்டிருக்கிறது.

இன்னொருமுறையும்தென்றல் உள்நுழையலாம்.

கட்டிடத்தின்விரிசல்

இடுக்குகளெங்கும்வேர்விட்டுத் தலைநீட்டி...

உதிர்வதற்காகவேகாத்துக்கிடக்கின்றன

பூக்கள்.

சாத்தியங்கள் மரணிக்கும்

ஒரு கொடுமழையின் பின்னிரவில்

இடிந்துகொண்டிருக்கிறது வீடு.

எப்படியிருந்தாலென்ன கதவுகள்...

மூடப்பட்டோ சாத்தப்பட்டோ...

கருப்பையின் ஞாபகத்தோடேயே...


நான் இறந்துவிடுகிறேன்

என்னை உன்

உள்ளங்கையில் புதைத்துவிடு.

வெளியில்......



முதல்நாள் சந்தித்தநீ

இல்லை நீ.

நீ முதல்நாள்

சந்தித்தநானுமில்லை நான்.

யாருமிங்குமில்லைமுதல்நாள்

சந்தித்த யாருமாய்.

சூரியனை விழுங்கிய

அலைகரைதட்டிப் போகிறது.

காத்திருப்போம் நாம் இனி வரும்

முதல்நாளுக்காகவும்

எதிர்ப்படும் முதல்நபருக்காகவும்.

சுழல்...



தொடங்கும்போதே முடிவுக்கு
வந்திருந்தது நம்
உரையாடல்.
இனி ஏதும் மிச்சமில்லை
அவரவர்
மொழிகளைப்
பத்திரப்படுத்துவதைத் தவிர.
நீ.....ண்டவெளி சுருங்கி
ஒற்றைப்புள்ளியாயிற்று.
இப்போதுசொல்
இந்தப்புள்ளியிலிருந்து
தொடங்கலாமா நம் உரையாடலை?

அன்பு நண்பர்களுக்கு....



கடந்த இரண்டரை வருடங்களாக 'மிதக்கும்வெளி' என்னும் வலைப்பக்கத்தின் வழியாக உங்களோடு உரையாடிவந்தேன். ஆனால் சமீபகாலமாக அப்பக்கத்தில் பதிவு எதையும் பதிவிட முடியவில்லை. பிளாக்கர்.கொம் என்னுடைய பிளாக்கை 'ஸ்பாம் பிளாக்' என்று அடையாளம் கண்டிருப்பதால் பின்னூட்டங்களை வெளியிட முடிகிறதேயல்லாது பதிவிட முடியவில்லை. இதன் பின்னணியிலிருப்பது பார்ப்பனச்சதியா, ஏகாதிபத்தியச்சதியா, பில்லிசூனியமா என்று தெரியவில்லை ((-. எனவே கீழ்க்கண்ட மூன்று வலைப்பக்கங்களின் வழியாக உங்களைச் சந்திக்கலாமென்றிருக்கிறேன்.
உரையாடுவோம்.


பிரியங்களுடன்...
சுகுணாதிவாகர்.