தொட்டிமீன்இன்னும் எத்தனைகாலம்
உன் அம்மா தலைவலிக்கு
தைலம் தேய்த்த கதையைச் சொல்வாய்.
கருப்பையோடு சுருங்கிவிட்டதுன் உலகம்.
நீ வாசலுக்குத் திரும்பு
அல்லது கதவை உடை
அல்லது முடி களை
அல்லது கடிதம் கிழி
அல்லது நகம் நறுக்கு
அல்லது....

1 comments:

said...

அல்லது..

எது செய்தாலும்
பிறப்பின் நோக்கம்
தெரியாது.. புரியாது..

மீண்டும்
அம்மா என்பாய்
சத்தியமாய்..