நட்சத்திரங்களிலிருந்து வழியும் சீழ்




















ஒரு மதுச்சாலையோடு
முடிந்திருக்கவேண்டிய வன்மம்
இறுதியாய் வீட்டின்
நடுக்கூடத்திற்கே வந்தது.
சன்னலைத் திறக்கும்போதெல்லாம்
கொலைவெறிபற்களின் பிம்பத்தில்
உடைந்துநொறுங்குகின்றன
முகம்பார்க்கும் கண்ணாடிகள்.
பனிபெய்து வெளுக்கும்
சாலையெங்கும் மலங்கழித்துப்போனாய்.
மேற்குவானத்தினின்று உதிர்ந்த
பெயர் தேவைப்படாத நட்சத்திரம்
ஒரு குழந்தையாய்ப் பிறந்ததாய்ப் பேசிக்கொள்கிறார்கள்.

சிறுநீர் கழித்த தடயம்





















பலராலும் எச்சில்படுத்தப்பட்ட
சொல்லொன்றே
எனக்குப் பெயராய்
இடப்பட்டிருக்கிறது.
பறவைகள் கூடுதிரும்பும் சாயங்காலப் பொழுதொன்றில்
எவராலும் அழைக்கப்படாத பெயரை
எனக்கு நானே சூட்டிக்கொள்வேன்.
ஒரு சொல்லே
நானாய் உணரப்படும் கணம்
ஒரு தீக்குச்சியின் முனை
கருகிய வாசம்.

சிறுநீர் பெய்த தடயம்






















பலராலும் எச்சில் படுத்தப்பட்ட
சொல்லொன்றே
எனக்குப் பெயராய்
இடப்பட்டிருக்கிறது.
பறவைகள் கூடுதிரும்பும் பொழுதொன்றில்
எவராலும் அழைக்கப்படாத
பெயரை எனக்கு
நானே சூட்டிக்கொள்வேன்.
ஒரு பெயராய் நான்
உணரப்படும் கணம்
தீக்குச்சியின் முனை கருகிய
வாசத்தை
உணர்ந்து தீர்கிறேன்.

இறுதியுணவு
























தேவன் விதைப்பதுமில்லை: அறுப்பதுமில்லை
பறவைகளே தேவனுக்கான
உணவை வழங்கின.
காலுதிரம் நக்கி
உயிர்த்த காலத்திலும்
ஒரு அப்பம் பகிர்ந்தானில்லை.
பறவைகள் அற்றுவீழ்ந்த
காலத்தின் கடைசிநாளில்
தேவனுண்ட கடைசித்
தானியத்தில் எழுதப்பட்டிருந்தது
ஒரு புறாவின் பெயர்.

உதைதின்ன ஆரியச்சூத்து


















நீலத்தின் விஷம்பாரித்துக்கிடக்கும்
வெளிகளை
அலசி வெளுக்கும் கறுப்பு.
சம்புகனின் வன்மம்
இளஞ்சூட்டாய் ஏறும் நாளில்
அறுந்துவீழ்கின்றன காவிக்கொடிகள்.
வரலாறுதோறும் எக்காளச்சிரிப்புதிர்த்த
ஆரியக்கூத்தின் கதைமுடிந்து
உதைதின்னு வீங்கியது ஆரியச்சூத்து.
நேற்றுமுதல்நாள் பாலத்தில்
சீதை தூமைதுடைத்த
ராமப்பிரதிகளை
மலம்துடைக்கத்
தொடங்கியிருக்கின்றன
கிழவனின் மடிவளர்ந்த வாரிசுகள்.
எப்போதும் வாலில் பற்றிய தீ
இலங்கையையே எரிக்குமென்னும்
வரலாற்றுமிதப்பு முடிகிறது.
வாலறுந்த வானரங்களுக்கு
இறுதியாய்ச் சொல்லவிரும்புவது இது
ராமனும் குறியிழந்து கிடக்கிறான்,
தயவுசெய்து வாயை எடு.

மழைத்தல்




யாரும் ரசிக்கவில்லை.
மழையை ரசிக்கிறது மழை
நிர்வாணம் ரசிக்கும் உடல்போல.
நிர்வாணமாய்த்தான் பெய்கிறது மழை.
ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.
------------------------------------------------

பெய்யெனப் பெய்யும் மழை
கவிதையின் சுதந்திரம்.
பெய்யெனப் பெய்யா மழை
மழையின் சுதந்திரம்.