நட்சத்திரங்களிலிருந்து வழியும் சீழ்
ஒரு மதுச்சாலையோடு
முடிந்திருக்கவேண்டிய வன்மம்
இறுதியாய் வீட்டின்
நடுக்கூடத்திற்கே வந்தது.
சன்னலைத் திறக்கும்போதெல்லாம்
கொலைவெறிபற்களின் பிம்பத்தில்
உடைந்துநொறுங்குகின்றன
முகம்பார்க்கும் கண்ணாடிகள்.
பனிபெய்து வெளுக்கும்
சாலையெங்கும் மலங்கழித்துப்போனாய்.
மேற்குவானத்தினின்று உதிர்ந்த
பெயர் தேவைப்படாத நட்சத்திரம்
ஒரு குழந்தையாய்ப் பிறந்ததாய்ப் பேசிக்கொள்கிறார்கள்.

0 comments: