இறுதியுணவு
தேவன் விதைப்பதுமில்லை: அறுப்பதுமில்லை
பறவைகளே தேவனுக்கான
உணவை வழங்கின.
காலுதிரம் நக்கி
உயிர்த்த காலத்திலும்
ஒரு அப்பம் பகிர்ந்தானில்லை.
பறவைகள் அற்றுவீழ்ந்த
காலத்தின் கடைசிநாளில்
தேவனுண்ட கடைசித்
தானியத்தில் எழுதப்பட்டிருந்தது
ஒரு புறாவின் பெயர்.

3 comments:

said...

கவிதை சூப்பர்.

போட்டிருக்கும் படம் தான் டவுசர் கிழிக்கிறது! :-(

said...

மதியம் வெள்ளி 28ஆம் நாள்! இந்நேரம் தனிமை மிக வருத்துகிறதா? கவிதைகளாய் எழுதித்தள்ளியிருக்கிறீர்கள்.. ஏதோவொரு தானியத்தில் உங்கள் பெயரும் எழுதப்பட்டிருக்கத்தானே வேண்டும்.

said...

திரும்ப திரும்ப படித்தும் சென்ற இரண்டு மூன்று கவிதைகளின் உட்கருத்தை அறிய முடியவில்லை. எனக்கு அதிக வாசிப்பு தேவைப்படுகிறது என்று உணர்கிறேன்