மழைத்தல்




யாரும் ரசிக்கவில்லை.
மழையை ரசிக்கிறது மழை
நிர்வாணம் ரசிக்கும் உடல்போல.
நிர்வாணமாய்த்தான் பெய்கிறது மழை.
ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.
------------------------------------------------

பெய்யெனப் பெய்யும் மழை
கவிதையின் சுதந்திரம்.
பெய்யெனப் பெய்யா மழை
மழையின் சுதந்திரம்.

3 comments:

said...

ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.

இந்த வரியை கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ?

இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் நன்றாக வந்திருக்கொமோ?

said...

தெரியவில்லை

Anonymous said...

ungkal muthal kavithaiyil unmai irukirathu...yathartham... human nature

kavithai nantaga irukirathu

bas