மதியம் புதன், ஆகஸ்ட் 15, 2007

ஒரே பதில்

ஏன் காதல்கவிதைகள் எழுதுகிறாய்
என்றுகேட்கிறாள் ஒரு அரசியல்தோழி.
உண்மையில் அவள் கேட்கவேண்டியது
ஏன் நீ கவிதைகள் எழுதுகிறாய்.
ஏன் அரசியல் கவிதைகள் எழுதுகிறாய்
என்று கேட்கிறாள் காதல்தோழி.
அவள் கேட்கவேண்டியதும் அதுவே.
ஆனாள் அவள் கூடுதலாய்க் கேட்டது
ஏன் கவிதைகளில் கோப்படுகிறாய்.
எனக்கு ஆத்திரம் வருகிறது
மூத்திரம் வருகிறது
சமயங்களில் கவிதையும்

9 comments:

மாசிலா said...

//மூத்திரம் வருகிறது//
என்னங்க இது அசிங்கமா?

நல்லாவே இல்லீங்க.

:-(

kiddy ppl said...

தோழரே!

அரசியல் தோழி, காதல் தோழி,
சொல்வதை விடுங்கள். பகுத்தறிவு தோழி கேட்கிறேன் கட்டுரையில் உங்கள் பெயர் போட்டுவிட்டேன் பார்த்தீர்களா?

மிதக்கும்வெளி said...

நன்றி தோழர். நீங்களெல்லாம் என் பக்கத்திற்கு வந்துசெல்வது மகிழ்வையும் ஆறுதலையும் கையளிக்கிறது. அடிக்கடி வந்து போங்கள்.

Unknown said...

//எனக்கு ஆத்திரம் வருகிறது
மூத்திரம் வருகிறது
சமயங்களில் கவிதையும்//

இயல்பாய் வருகிறதென்று வெளிப்படுத்த
இன்னும் அழகாய் சொல்லலாமே!
ஆத்திரத்துக்கு அடுக்கு வேண்டியா!

உண்மைத்தமிழன் said...

//மூத்திரம் வருகிறது
சமயங்களில் கவிதையும்//

திருந்தவே மாட்டீங்களா சாமி..

லக்கிலுக் said...

டவுசர் கிழியாத அளவுக்கு இக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள். நன்றி!

பாரதி தம்பி said...

//டவுசர் கிழியாத அளவுக்கு இக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள். நன்றி//

தாவு தீராமல் படிக்க முடிந்தது.. நன்றி

ILA (a) இளா said...

//மூத்திரம் வருகிறது//
???

குசும்பன் said...

ஏன் இந்த முறை டுர்ர்ர்ர் வரவில்லை:)???