இறுதி ஊர்வலத்தின் ஞானம்
இறக்கைகள் தவிர்த்து வண்ணத்துப்பூச்சியை
யோசிக்கமுடிவதில்லை நம்மால்.
இறக்கைகளற்ற வண்ணத்துப்பூச்சிகளை
நேசிக்கவும் கூடுவதில்லை.
முந்தாநேற்று பார்த்தேன்
இறந்துபோன வண்ணத்துப்பூச்சியைச்
சுமந்துசென்ற எறும்புகளுக்கு
இறக்கைகள் முளைத்திருந்தன.

1 comments:

said...

//இறக்கைகள் தவிர்த்து வண்ணத்துப்பூச்சியை
யோசிக்கமுடிவதில்லை நம்மால்.
இறக்கைகளற்ற வண்ணத்துப்பூச்சிகளை
நேசிக்கவும் கூடுவதில்லை.//


மிக அருமை