விகிதங்கள்

எதிர்வீட்டு வாயிற்படியில்
மருமகளுக்குப்
பேன் பார்த்துக்கொண்டிருந்தாளொரு பெண்.

இழவுவீடு சென்று
குளிக்காமல்
உள்நுழைந்ததற்காய்ப்
பெருங்கூச்சலிட்டாள் மனைவி.

சலூன்கடையில் பார்த்த
ஜான்கென்னடி புகைப்படத்திற்கு
குங்குமம் வைக்கப்பட்டிருந்தது.

திரும்பிப்பார்த்த எனக்குத்
திகீரென்றது.
சபரிமலைக்கு
மாலை போட்டுவந்திருந்தார்
போஸ்ட்மாடர்னிஸ்ட்
(என்று சொல்லிக்கொண்ட)
யவனிகா.

3 comments:

said...

கடைசி பத்தி சூப்பர்!

said...

ஹூ ஈஸ் எவனிகா ?

said...

யவனிகா சிறீராம் ஒரு கவிஞர். சில பதிவுகளில் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.