பிளாஸ்டிக் சிலுவை
உடல்கள் மொழிபெயர்க்கப்படும்
பின்னிரவுவேளை
ஒரு இனிய திரவகணத்தில்
பிளாஸ்டிக்கால் ஆன சொர்க்கத்திலிருந்து
தப்பித்துவந்தார் கடவுள்.
தேநீரகத்தில் கடவுளுக்குக்
கையளிக்கப்பட்டன
PCR சனியனுக்குப் பயந்து
use and throw டம்ளர்கள்.
பூமியின் மார்பெங்கும்
பூணூலைப்போல
வெளுத்துக்கிடந்தன
பிளாஸ்டிக் டம்ளர்கள்.
கடவுள் முட்டாள் என்பதற்கு
அழிக்கப்பட முடியாத
பிளாஸ்டிக்குகளே சாட்சி.
உருவிப்போடப்பட்ட ஆணுறையின்
ஒழுகும் துளிகளில்
கடவுளின் ஆயுள்
குறைந்துகொண்டிருந்தது.
மீண்டும் தப்பித்தோடினார் கடவுள்.
வவ்வால்கள் அடையும்
பாழடைந்த மண்டபத்தின் இருள்மூலையில்
கடவுளின் காலில்
அகப்பட்டது
தேவகுமாரனின் சடலம்.
பக்கத்தில் கிடந்தது
ஒரு பிளாஸ்டிக் சிலுவை.

10 comments:

said...

fantastic

said...

exceelent. really i feel exhausted after read this. This is certainly to be one of your master piece.

said...

வாரே வாவ்...

எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்றாக இதுவும் இடம்பெற்றுவிட்டது சுகுணா...

இந்த பாதிப்பிலிருந்து நான் விலக நீண்ட நாட்களாகும்...

said...

பைத்தியக்காரனுக்குப் பிடித்த, ஒரு பைத்தியம் பிடித்தவனின் பைத்தியக்கார கவிதை ((-

said...

அற்புதமாக வந்திருக்கிறது கவிதை.

said...

நல்ல கவிதை சுகுணா.,

அன்புடன்
சம்பூகன்

said...

உங்கள் அண்மையக்கவிதைகளிலே பிடித்துக்கொண்டது இது

said...

Azhagana,arpudhamana kavidhai.Paarattugal.Ini ungal moolam plastic patri therindhukkondavargal kavidhaigal varalam.

said...

ம்ம்ம்.. நல்லாருக்கு.

said...

//பைத்தியக்காரனுக்குப் பிடித்த, ஒரு பைத்தியம் பிடித்தவனின் பைத்தியக்கார கவிதை//

இந்த கவிதை சூப்பர்!! :)