முடிவாய்...
விடைபெறும் நேரம்
பள்ளத்தாக்கெங்கும்
அமைதியே நிரம்பியிருந்தது.

என் மார்பு ரோமங்களைத்
தனதாக்கிக்கொண்ட மிருகம்
எழுந்துவந்து
உன் கன்னங்களில் மாறி மாறி
அறைய விரும்பியது.

உடலெங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறது
உப்புக்கரிக்கும் ரத்தம்.

நீ விடைபெற்றுபோனபின்
உன் பெயரெழுதி...
பெயரெழுதி...
கிழித்துப்போடுகிறேன்.

2 comments:

said...

//நீ விடைபெற்றுபோனபின்
உன் பெயரெழுதி...
பெயரெழுதி...
கிழித்துப்போடுகிறேன்.//

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு ;-)

said...

நான் சின்னப்புள்ளத்தானே முபாரக்!