நாய்ப்பசி


யுகப்பசியெடுத்துத்
திரிந்துகொண்டிருந்தது நாய்.

அடிவயிற்றிலிருந்து கிளம்பிய
ஓலம்தாங்காது
உதிர்ந்து விழுந்தன விண்மீன்கள்.

பிரளயப்பசியில் தன்
பின்னுடலைக்
கடித்துப்பார்த்தும்
வராதபோது
ஆத்திரப்பட்டு
வானவிளிம்பில் போய்
முட்டிக்கொண்டது.

சூரியன்மேல்
சிறுநீர் கழித்து
ஓடிய நாயின் பற்கள்
நிலாவை
மண்ணில் போட்டுப்
புரட்டிப் புரட்டி
இழுத்துப் பார்த்தது.

காணச்சகியாத கடவுள்
ஆதாமின் விலா எலும்பெடுத்து
தூக்கிப்போட்டார்
நாய்
கடித்துக்குதற.

3 comments:

Anonymous said...

//அடிக்கடி ஏன் முகம் பார்க்கிறேன் இழந்துவிடுவேன் என்பதாலா//

இல்லை.இந்த மூஞ்சியை விட கேவலமான மூஞ்சி உலகில் கிடையாது என்ற கர்வம் தான் பார்க்க வைக்கிறது.

said...

பிரமாதம்.. இதுவும் இதற்கு முந்தைய பிளாஸ்டிக் சிலுவையும்.

said...

Puriyavillai!