கருணைக்கொலை













பனிபெய்கிறது தயாள்!
கம்பளிகளை இறுக்கிக்கொள்.
பாம்புகள் நெளியும் பாதைகளில்
பயணம் அமையாதிருக்கட்டும்.
ரொட்டித்துண்டிற்காய்
நாவை அரிந்து தரும்படி
இறுகிக்கிடக்கிறது காலம்.
மணிக்கூண்டின் கடிகாரமுட்களில்
நசுங்கிச்செத்தது புறாவொன்று.
வேறெவரையும் விட
எச்சரிக்கையாயிரு கருணையாளர்களிடம்.
ஒவ்வொருகருணையாளனின் நிழலின்கீழும்
பதுங்கிக்கிடக்கிறது வன்மத்துடன்
உருவத்தயாராயிருக்கும் வாள்.
சாவுகடக்காத வீட்டில்
மனோன்மணி கடுகுவாங்கி
திரும்பியிருந்தபோது
பரிநிப்பானம் அடைந்திருந்தான் புத்தன்.
நேற்றுமுதல்நாள்
ஒரு சின்னஞ்சிறுதளிரை வெட்டினேன்
புத்தனின் பெயர்சொல்லி.

4 comments:

said...

கொலை கருணை ஆகலாம் இருத்தலிலும் இல்லாது போதல் மேலாகையில் ஆனால்
கருணைகள் கொலையுண்டுவிடக்கூடாது...

பேரின்பம் என்பது நிகழ்காலத்தில் வாழ்வது

புத்தன் என்ன சொன்னான்... இது உங்கள் கவிதைக்காக மட்டும் கேட்கப்பட்ட கேள்வியல்ல...

மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று..வாழ்வு வாழப்படவேண்டியது...

said...

மகளிர்தின வாழ்த்துக்கள்...

said...

மகளிர்தின வாழ்த்துக்கள்...

said...

மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...