கவனம்













சின்னக்குழந்தையாய்
மழை
சிணுங்கிக்கொண்டிருக்கும்.

வாகனங்களின்
விரைதலினின்று
தப்பித்து ஓடும்
ஒரு காலிழந்த நாயொன்று.

அன்றாடங்களிலொன்று
அடிபட்டதன் வலியோடு
அவசரமாய் எடுக்கப்படும்
நடைபாதைக்கடைகள்.

ஒரு தொழுநோயாளியின்
பிச்சைப்பாத்திரம்
சில்லறைக்காசுகளாலன்றி
மழைநீரால் நிறையும்.

ஒதுங்க இடம்
தேடி

டு
ம்
நான்
வளைந்து
குனிந்து
பார்ப்பேன்
என் காற்சட்டையில்
ஏதேனும்
கறைபட்டிருக்கிறதாவென்று.

8 comments:

said...

அப்பாடா, புரியற மாதிரி ஒரு கவிதை !

- (குசும்பனுக்காக)

நல்லவேளை டவுசர்கிழியலை
(லக்கிலுக்கிற்காக)

said...

//அப்பாடா, புரியற மாதிரி ஒரு கவிதை!//

அப்ப இத்தனை நாளா வேணும்னுதான் புரியாத மாதிரி எழுதுனீங்களா..? ஏதோ எனக்கும் புரிஞ்சுச்சு..

said...

சுகுணாதிவாகர் said...
அப்பாடா, புரியற மாதிரி ஒரு கவிதை !

- (குசும்பனுக்காக)

நல்லவேளை டவுசர்கிழியலை
(லக்கிலுக்கிற்காக)///

வாசகனின் மனதை அப்படியே புரிந்து வைத்து இருக்கிறீர்கள் சுகுணா:))

said...

// சுகுணாதிவாகர் said...
அப்பாடா, புரியற மாதிரி ஒரு கவிதை !//

இப்பயும் புரியற மாதிரி ஒரு கவிதை இல்லை
புரியிர கவிதை:)))

Anonymous said...

நான்
வளைந்து
குனிந்து
பார்ப்பேன்
என் காற்சட்டையில்
ஏதேனும்
கறைபட்டிருக்கிறதாவென்று.

avarkal kasttam avarkalukku

ithil naam enna seya.. ஏதேனும்
கறைபட்டிருக்கிறதாவென்று.

manathil oosi munai ontu kuthiya vaethanai.. enakku

said...

/manathil oosi munai ontu kuthiya vaethanai.. enakku/

யாருப்பா, அது சுய புலம்பலையெல்லாம் பின்னூட்டமாய்ப் போடுறது? ஹூம் ! என் பிளாக் எதுக்கெல்லாம் பயன்படுது?

Anonymous said...

//தேடி

டு
ம்
நான்//

ஓடும் என்பது இப்படி உடைத்திருப்பது ஏண்ணு புரியலியே..

நேராக ஓடுவதற்கா?

Anonymous said...

naanthappa...

ஒரு தொழுநோயாளியின்
பிச்சைப்பாத்திரம்
சில்லறைக்காசுகளாலன்றி
மழைநீரால் நிறையும்.

ஒதுங்க இடம்
தேடி

டு
ம்
நான்
வளைந்து
குனிந்து
பார்ப்பேன்
என் காற்சட்டையில்
ஏதேனும்
கறைபட்டிருக்கிறதாவென்று.
i compared the above two..

due to rain, the begger found his vessal empty but filled by rain water..
2nd one is the rich man wanted to know any stain is there...

avarkalin paarvaiyil thaedalil ethanai vithiyasam... kavinjarae athai sonnaen... oosi munai ontu kuthiyathai pola enakku irunthathu entu ... ithil enga suya pulambal vanthathu...
ungkal kavithai puriyapattirukirathu ental athu ungalukku kidaitha verti allavaa