தேவையற்ற மன்னிப்பு

ஒவ்வொருமுறையும் மன்னிப்பு
கேட்கிறேன்.
எனில்
ஒவ்வொருமுறையும் தவறு செய்கிறேன்.
இம்முறை
மன்னிப்பு வேண்ட விரும்பவில்லை.
வெட்கங்கட்டுக்கிடக்கிறது
நானும் என் மன்னிப்பும்.

1 comments:

said...

பாக்தாதில் வாழ்ந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜுலானியின் போதனை, 'நீ பாவம் செய்து விட்டு பாவமன்னிப்பு கோருகிறாய், திரும்பவும் பாவம் செய்கிறாய், இப்பொழுது உன் பாவமன்னிப்பே பாவமாகி விட்டது, உன் பாவமன்னிப்பிற்கும் சேர்த்து பாவமன்னிப்பு கேட்டுக் கொள்.." - உங்கள் கவிதை நினைவு படுத்தியது அந்த போதனைகளை - நன்றாக இருக்கிறது - நாகூர் இஸ்மாயில்