தலையூழிமலைப்பாம்பின் வயிறுகிழித்து
துள்ளிக்குதிக்கிறதொரு ஆட்டுக்குட்டி.
வெடித்துச்சிதறுகிறது நடுகல்லொன்று.
நாவாயை நிறைத்து
நுரைக்கிறது அலை.
பூமியை ஒரு பந்தாய்ச் சுருட்டி
தன் தீட்டுத்துணியில்
ஒளித்துவைக்கிறாள் பூதகி.

0 comments: