சாத்தியங்கள்

ஒரு மது உங்களுக்கு
என்னவெல்லாம் வழங்கக்கூடும்?
உத்திரவாதவமான அரைமணிநேர போதை
எழும்பாக்குறி
இலக்கியச்சண்டை
கருத்துப் பகிர்தல்கள்
சில பாடல்கள்
முலைகள் குறித்த தீவிர உரையாடல்கள்
கண்ணீர்த்துளிகளின் நெகிழ்வு
சில கொலைகள்
அல்லது
சில
அல்லது
பல
தற்கொலைகள்
சமயங்களில்
கவிதை, ஓவியம்
மற்றும் வியாபாரத்திற்கான
முன் திட்டங்கள்
உறுதிமொழிகள்
தீர்மானங்கள்
கெட்டவார்த்தைகள்
பிரம்பு
அல்லது குண்டாந்தடி
அல்லது கொலைவாள்
ஒரேபெயர் சொன்னால்
ஆயுதம் அல்லது அதிகாரம்
வசைபாடல்
தன்னைநிறுவல்
சில நேசங்களின் இழப்பு
இதயங்களின் மீதான
காயங்கள் பரிசளிப்பு
மறுநாளைய மன்னிப்பு

1 comments:

said...

//மறுநாளைய மன்னிப்பு\\
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கி ராத்திரிக்கு துங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்.