யோனிவாசல்

எனக்கு மட்டுமல்ல
வீடு அல்லது வீடுகளற்ற
எவருக்குமே இருக்கத்தான் செய்கிறது
வாசல்களைத் தரிசிக்கும் தாகம்.

மறைத்துக்கட்டப்பட்ட
மதில்சுவர்களே
நம் யூகங்களை எழுப்பிப் பார்க்கின்றன.
எட்டிப்பார்க்க இயலாதவர்களில் சிலர்
மதில் தாண்டிக் குதித்துவிடலாம்.

நினைவுகளெங்கும் நெளிந்துகொண்டிருக்கின்றன
வாசல்கள்.

வாசல்கள் பற்றி
எனக்கேதும் தெரியாது.
ஆனாலும் ஒன்றை
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
நான் வாசல்வழியாகவே
வந்திருக்கிறேன்.

                (2000)

2 comments:

said...

அற்புதம். தலைப்பில் யோனியைத் தவிர்த்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் ... என்பது என் எண்ணம்..

said...

மிகவும் ரசித்தேன்... யோனி குறித்த எண்ணத்தை சரியாகவே பதிவு செய்ததாக நம்புகிறேன்.

http://adisuvadu.blogspot.com/