காமன்மேன்களின் கவனத்திற்கு...













அதுவொரு கொண்டாடப்பட வேண்டிய காதலர்தினம்தான்
பிப்ரவரி 14,1998.
நானும்கூட கல்லூரியின் இரண்டாமாண்டில்
கொண்டாடிக்கொண்டுதானிருந்தேன்.
அதேநாளில்தான்
அயோத்தியிலிருந்து கோவைக்கு
மரணத்தை அழைத்து வந்திருந்தார் அத்வானி.
மரண வெடிப்பில்
சதைத்துணுக்குகள் சிதறிக்கிடந்தன.
குண்டுவெடித்ததாய்க்
கைது செய்யப்பட்டோரில்
22 பேரின் ஆயுள்தண்டனையை
நேற்றுதான் ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
இந்தியாவில் பொதுவாக ஆயுள்தண்டனை 14 ஆண்டுகள்.
22 பேர் சிறையில் இருந்ததோ 11 ஆண்டுகள்.
இழந்துபோன காலத்தை
தலைமுறைக்கு மாற்றப்பட்ட கொலைப்பழியை
இன்னமும் கண்களில் மிச்சமாய்
உறைந்திருக்கும் அவநம்பிக்கையை
யார் சரிப்படுத்தப்போவது
நீங்கள் அல்லது நான்?
உங்களது அல்லது எனது குழந்தை?
அத்வானி அல்லது பாரதமாதா?
மன்னிக்கவும் இது கவிதையாய் வரவில்லை.
நான் கவிதை எழுதவும் வரவில்லை.
அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது.
அவர்களிடம் போலீஸ் இருக்கிறது.
அவர்களிடம் அரசு இருக்கிறது.
அவர்களிடம் செய்திகள் இருக்கின்றன.
மன்னிக்கவும் மீண்டும் மீண்டும்
ஒரே வார்த்தையை உளறிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது.
என்னிடம் என்ன இருக்கிறது?
வார்த்தை...
கவிதையாய்க் கூட மாறமுடியாத வார்த்தை.
நல்லது கனவான்களே.
அந்த 22 பேரையும் வேனில் ஏற்றி
பொட்டல்காட்டில் இறக்கிவிடுங்கள்.
இந்த கவிதை எழுதியதற்காய்
23வதாய் என்னையும்.
ஒருநிமிடம், இந்த கவிதையை
யாரேனும் ஆதரிக்கக்கூடும்.
24வது...
25வது...
................
............
கண்களைக் கட்டி சுடத்துவங்குங்கள்.
இப்போது உங்கள் கவுண்ட் டவுன் தொடங்கட்டும்.
10
9
7
8
6
.
.
.
.

8 comments:

said...

22-வது ஆளு நான்தான்..!

said...

மன்னிக்கவும் 22 பேர் என்பது தவறுதலாக 21 பேர் என்று கவிதையில் பதிவாகியிருந்தது. மாற்றிவிட்டேன்.

said...

:(((
25

said...

24
:-(

Anonymous said...

’மரணத்தை அழைத்து வந்திருந்தார் அத்வானி.
மரண வெடிப்பில்
சதைத்துணுக்குகள் சிதறிக்கிடந்தன.
குண்டுவெடித்ததாய்க்
கைது செய்யப்பட்டோரில்’

அத்வானியைக் கொல்லத்தானே திட்டமிட்டிருந்தீர்கள்.அன்று எத்தனை
அப்பாவிகள் பலியானார்கள்.அவர்கள்
உயிர்களை யார் திருப்பித் தருவார்கள்.
நீங்களா, குண்டு வைத்தவர்களா இல்லை வேறு யாராவதா?.சிறையில் இருந்தவர்கள் இன்றும் இருப்பவர்கள்தானே. குண்டு வெடிப்பில் ஒரே மகனை இழந்த பெற்றோரின் சோகம் உனக்கு புரியுமா.
உனக்கெல்லாம் மனச்சாட்சியா கிடையாதா.
கோவையில் அந்தக் குண்டு வெடிப்பை நியாயப்படுத்தி அடுத்த கவிதை எழுதினால் அதை
பாராட்ட ஒரு கூட்டம் வரும்.

Anonymous said...

ஏன்னா தேசபக்தி உனக்கு

said...

எல்லாமே அரசியல் ஐயா, அவர்களை குற்றவாளி என்று நிரூபிக்க அரசாங்கம் விரும்பவில்லை, அவ்ளோதான், விட்டால் செத்தவங்க சொந்த செலவுல பாம் வச்சிக்கிட்டாங்கன்னு சொல்லுவீங்க போல...

said...

நன்றி அறிவிக்கும் உங்கள் பெயரில் நான் மிதக்கும் வெளியை லிங்க் கொடுக்க சொல்லி தம்பிக்கு கேட்டிருந்தேன்.அவன் இந்த லிங்கை கொடுத்திருந்தான்.அது கூட நல்லாவே இருக்கு...