இந்த நூற்றாண்டின் முதல் கவிதை









காலமற்ற காலத்தின்
அகால மார்பில்
வடுக்கள் மறையவில்லை.
வற்றித்தான் போய்விட்டது
உள்ளங்கை பிசுபிசுப்பில்
ஊறிய நதி.
ஊனமுற்ற தேவதைகளே
சினேகிக்க கிடைக்கிறார்கள்.
மதியவெறுமை அடிக்கிறது தினசரி.
சாரமற்றுக் கிடக்கிறது வாழ்க்கை.
சம்பிரதாயமாய் வரவேற்றுவைப்போம்.
இந்த நூற்றாண்டு
எதை விழுங்கி வயிறுபுடைக்குமோ?
எப்படியாயினும் என் இனிய சோதரி,
உன்னைப் பழகியும் இழந்தும் போன
போன ஆயிரமாம் ஆண்டு
இன்னமும் இருக்கத்தான் செய்கிறது
உன் முழங்கைத்தழும்புகளை நினைவூட்டி.

                    (01.01.2000)

2 comments:

said...

//உன்னைப் பழகியும் இழந்தும் போன
போன ஆயிரமாம் ஆண்டு
இன்னமும் இருக்கத்தான் செய்கிறது
உன் முழங்கைத்தழும்புகளை நினைவூட்டி.//

எத்தனை வலிகள் பொதிந்த கவிதை....

said...

வித்தியாசமாய் சிந்திக்கிறீர்கள் சுகுணா.