மதியம் ஞாயிறு, டிசம்பர் 13, 2009

நீ உன் கொலைவாளை உருவுவதற்கு முன்பு சற்று நிதானித்திருக்கலாம்.













உனக்கும் எனக்கும்
மத்தியில் இருந்தது ஒரு சொல்.
ஒரே சொல்.
அந்த சொல் ஒரு கொலைவாளாய் மாறியபோது
திடுக்கிட்டுத்தான் போனேன்.
வாளின் முனையில்
வன்மத்தின் விஷம் வேறு தடவியிருந்தாய்.
என் கழுத்தின் மேல்
உன் கொலைவாள் உயர்ந்தபோது
நான் மெய்யாலுமே அழுதேன்.
எந்த நரம்பு அறுத்தால் உயிர் அறுபடும்
என்னும் கொலைச்சூத்திரம் தெரியாத
உன் பேதமை குறித்து.
உன்னிடம் இல்லாது
என்னிடம் இருப்பது ஒரு குழந்தை.
உன் சொல்லைப்போலவே
ஒரே குழந்தை.
அந்த குழந்தை உன் வாளின் கைப்பிடியைப்
பலூனாய் மாற்றிவிடும் சாத்தியம் கொண்டது.
இப்போது உன் வாளின் முனையில்
என் குழந்தையின்
கண்ணீரும் சிறுநீரும் வேறு கலந்திருக்கிறது.
நான் உன் வாளிடமிருந்து தப்பிப்பதற்காக இதைச் சொல்லவில்லை.
உண்மையாகவே விஷத்தை விட அடர்த்தியானது
ஒரு குழந்தையின் மூத்திரம்.
நாளை அது உன்னோடு சினேகித்து
மதுவருந்தும் சாத்தியம் உண்டுதானே

(நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதிய இந்த கவிதையைப் போதையில் போனில் சொன்னபோது பொறுமையாய்க் கேட்டவர்களுக்கும் என் மகன் கத்தார்நவீன்சித்தார்த்துக்கும்)

13 comments:

S.A. நவாஸுதீன் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மணிஜி said...

நல்ல கவிதை.சமீபத்திய யதார்த்தமும் தொனிப்பதால் இன்னும் வலிமையாகவும்...

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு சுகுணா திவாகர்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

காயத்ரி சித்தார்த் said...

ஜாரி.. ஒன்னியும் பிரியல.. :(

ஊசூ said...

Hi,
Good one but it reminds all MGR, Rajini movies...Is theme cliched?

Vidhoosh said...

ம்ம். யதார்த்தங்கள்???

-வித்யா

thiyaa said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

குழந்தையின் மூத்திரம் மனதை நனைக்க வல்லது.. அருமையான கவிதை
வாழ்த்துக்கள்

Sakthi said...

nice

Ashok D said...

அறிவார்ந்த விக்ரமன் படம் பார்த்துபோலயிருந்தது.. சுகுனா :) நீங்கள் சிரிக்கமாட்டீர்கள் உங்களுக்கு :)

இராவணன் said...

;)

பிடித்தது

பத்மா said...

உன்னிடம் இல்லாது
என்னிடம் இருப்பது ஒரு குழந்தை.
உன் சொல்லைப்போலவே
ஒரே குழந்தை.
kuzhanthai manama athu?
all the best
thalaippum nandraaga ullathu
padma

T.V.ராதாகிருஷ்ணன் said...

யதார்த்தம்..வாழ்த்துகள்