இறக்கைகள் அறுந்துவீழ்ந்த
தேவதையொருத்தியை
எடுத்து வளர்த்தேன்.
நிலவின் சுவர்களில்
எழுதப்பட்ட பாடலைப்
பாடிக் காட்டுவாளெனக்கு.
காலை எழுகையில்
என் மார்புக்காம்புகளில்
பனியொத்த முத்தம் ஈவாள்.
செடிகளில்
பட்டாம்பூச்சிகள்
பறித்துத் தருகிற அவளைப்
படுக்கையில் தள்ளி
வலுக்கட்டாயமாய் என் குறியைத்
திணித்தபோதுதான் பார்த்தேன்
அவள் யோனியில் முளைத்திருந்தது
குறுவாளென்று.
நன்றி : சனதருமபோதினி 2001.
மதியம் திங்கள், நவம்பர் 30, 2009
யோனியில் முளைத்த குறுவாள்
Posted by
சுகுணாதிவாகர்
at
10:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சொற்களின் ஆழங்களுக்கு கூட்டிச் செல்கிறது.பளீரென்று அறைகிறது,இந்த கவிதை...
is it poem related having sex with TIRUNANGAI.
அப்படியாக வாசிப்பதற்கும் உங்களுக்குச் சுதந்திரம் உள்ளது குப்பன்.
Post a Comment