சாத்தியங்களின் மரணம்



சாத்தப்பட்டுக்கிடக்கின்றன கதவுகள்.

ஒலியெழுப்பி உரக்கத்தட்டாதிருக்கட்டும் உங்கள் கரங்கள்.

ஏற்கனவே தென்றலொன்றுநுழைந்ததன்

சாட்சியமாய்ப்பூவொன்று

கலைத்துப் போடப்பட்டிருக்கிறது.

இன்னொருமுறையும்தென்றல் உள்நுழையலாம்.

கட்டிடத்தின்விரிசல்

இடுக்குகளெங்கும்வேர்விட்டுத் தலைநீட்டி...

உதிர்வதற்காகவேகாத்துக்கிடக்கின்றன

பூக்கள்.

சாத்தியங்கள் மரணிக்கும்

ஒரு கொடுமழையின் பின்னிரவில்

இடிந்துகொண்டிருக்கிறது வீடு.

எப்படியிருந்தாலென்ன கதவுகள்...

மூடப்பட்டோ சாத்தப்பட்டோ...

4 comments:

said...

//ஏற்கனவே தென்றலொன்றுநுழைந்ததன்
சாட்சியமாய்ப்பூவொன்று
கலைத்துப் போடப்பட்டிருக்கிறது.

இன்னொருமுறையும்தென்றல் உள்நுழையலாம்//

யப்பா! எப்படி இப்டியெல்லாம்?

said...

ம்ம்ம்... ரெண்டுவாரமா முன்நவீனத்துவ வாதிகள் எல்லாம் நிம்மதியா இருந்தோம்... இப்போ மறுபடியும்...

said...

exrtodinary!!!

Anonymous said...

ஐய்யா சத்தியமா அர்த்தம் புரியல.
என்ன சொல்ல வறீங்க?