கணவன் என்ற மிருகம்
















விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

3 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

என்னத்தான் பண்ணச் சொல்றீய... யாரோ சில ஆம்பளங்க புரியாம பொம்பளக்கி செய்யிற கொடுமையப் பாத்துட்டு கொடி புடிச்சா.. என்னத்த சொல்றது...? பல மெஜாரிட்டி ஆம்பளங்க ஒளுங்க குடும்பம் நடத்துறாகளே.. அவுகள உங்க கவித பாதிக்கப் போவுதுண்ணே...

said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் விடைசாமாய் இருகின்றன ....
முக்கியமாக , மற்றவர்கள போலின்றி பெரும்பாலும் புரிகிறது .. ஹிஹி
வாழ்த்துக்கள்