வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்
கங்கைநீர் தெளித்து புனிதப்படுத்துவீர்
உன் கக்கங்களின் மயிர்சிரைத்து
ஆடைகளின் அழுக்ககற்றி
சிதைந்துபோன உங்கள்
செருப்புகளைச் செப்பனிட்ட
எமதால் தொடப்பட்ட இடங்களை.
பல்லிமூத்திரத்தால் வீச்சமடிக்கும்
கர்ப்பக்கிரகத்தின் இருட்டுமூலையில்
பொருள்புரியா பார்ப்பானின்
மந்திரமுணுமுணுப்பு செவிமடுத்திருப்பது
உன்னைப் பொறுத்தவரை சாமி.
எனக்கு அது என்
துரட்டியில் அள்ளித்
தூரக்கொட்டப்படும் மலம்
மதியம் வெள்ளி, செப்டம்பர் 18, 2009
பஞ்சமனின மொழியில்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
aathikam" moonchiyil kaari thupiyathu pool....
great....
இந்த புகைப்படம் கண்ணீரை வரவழைக்கிறது. இந்த புகைப்படத்தின் கதை என்ன..
Post a Comment