கொலைக்களம்


வியப்பதற்கு ஏதுமில்லை
வாட்களின் பளபளப்பு.
யுத்தமென்று சொல்வதற்கும்
நியாயங்களில்லை.

சுன்னத்குறியினரைத்
தேடியலையும்
வாளின்பசியின்முன்
கையறுநிலையன்றி யாதுமில்லை.
மறைப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும்
என்றாயின அடையாளங்கள்.

கழுகும்
சிறகுவிரிக்கும்நிலத்தில்
சிசுக்களின் ரத்த நிணங்களால்
ஈரப்பட்டது பூமி.

உரத்த அழுகுரல்களில்
அமுங்கிப்போனது
வரலாற்றில் முன் ஒலித்த
கிழட்டுத்தீனக்குரல்.

இன்னுமொரு
கொடுமழை வரும் அறிகுறியாய்ச்
சிவந்துகிடக்கிறது வானம்.

பிறந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்ணில்
நடுவீதியில்
செத்துக்கிடந்தார் காந்தி.

(குஜராத் இனப்படுகொலையையொட்டி ஆளூர் ஷா நவாஸ் தொகுத்து வானம் வெளீயீட்டகம் சார்பில் வெளிவந்த 'தோட்டாக்கள்' கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை)

5 comments:

said...

"இன்னுமொரு
கொடுமழை வரும் அறிகுறியாய்ச்
சிவந்துகிடக்கிறது வானம்.

பிறந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்ணில்
நடுவீதியில்
செத்துக்கிடந்தார் காந்தி"


செத்துக்கிடந்தார், செத்துக்கிடக்கிறார், செத்துக்கிடப்பார் ..,

மோடி இருக்கும் வரையிலும் தொடரும் இனப்படுகொலைகள் ..,

said...

கண்ணீர் வரவழைக்கிறது உங்க கவிதை.

Anonymous said...

பல நூறு வருடங்களாக.....

வியப்பதற்கு ஏதுமில்லை
வாட்களின் பளபளப்பு.
யுத்தமென்று சொல்வதற்கும்
நியாங்களிருந்தன.

நாடாளவும்
நசுக்கி எமது மகளிர்
முலை நக்கி பெண்டாளவும்
அம்மணமான குறிகளுடன்
அலைந்து திரிந்தது ஒரு கூட்டம்

மனிதத்தை பார்க்கக் கூடாதாம்
மதத்தின் கோட்பாடு சொல்கிறது
இணை வைக்கும் கூட்டமாம்
ஈட்டியால் கொல்கிறது
கசக்கி எறியும்
கயவர்களிடமிருந்து காக்க
கைம்பெண்களை கட்டி
நெருப்பிலிட்ட கொடும்பாதகம்
இங்குதான் நடந்தது.

சுன்னத் இல்லாத குறிகள்
சூம்பித்தான் போயின.

கழுகும்
சிறகுவிரிக்கும்நிலத்தில்
சிசுக்களின் ரத்த நிணங்களால்
ஈரப்பட்டது பூமி.

உரத்த அழுகுரல்களில்
அமுங்கிப்போனது
வரலாற்றில் முன் ஒலித்த
கிழட்டுத்தீனக்குரல்.

இன்னுமொரு
கொடுமழை வந்தேவிட்டது
சிவந்துகிடக்கிறது வானம்.

பிறந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்ணில்
நடுவீதியில்
என்றோ உணர்வின்றி
செத்துதான் கிடக்கிறார் காந்தி.

இந்தக் கவிதை
இன்னமும் பல ஆண்டுகள்
சொல்லப்பட்டுக் கொண்டுதான்
இருக்கும்.
இங்கிருக்கும் பலர் விழித்தெழியும் வரை.

said...

அருமையான கவிதை, அதைவிட அருமையான புகைப்படம், முக்கியமாக அந்த சிறுமியின் பின்னால் உள்ள சுவரில் ரத்தக் கறைகள்....(விவேக் ஒரு படத்தில் சொல்வதைப் போல்) ஒன்றல்ல 1000 காந்தி வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

said...

பல சமயங்களில் உங்களிடம் சொல்லத் தோன்றுவது... இது போன்ற கவிதைகள்தான் நமக்கு தேவை.