பயணமற்ற வெறும் பாதைமழையற்றுப்போன பூமியின் கண்களில்
சூரிய எரிச்சல்.
தணிக்கும் பனித்துளி முத்தம்.
இன்னும் தாவெனக் கைநீட்டிக்
காத்திருக்கும் கொன்றைச்சிவப்பிற்காய்
அதிகாலை. அப்பனியில்
உடன்வந்த யாத்ரீகனின்
ஷூத்தடங்கள் பட்டு
விலகி மரிக்கும் புல்வெளியில்
இறுதியாய்க் கேட்டது அவ்
வண்ணத்துப்பூச்சியின் பாடல்.
காலைகளைப் பார்ப்பதற்காய்
உறக்கத்தைத் தொலைக்க வேண்டிய
அவசியமில்லை என்று
போர்வைக்குள்
புதைகிறாள் அவள்.

4 comments:

said...

காலைகளைவிட உறக்கும் மகிழ்ச்சியானது. அதனால் பாதைகளற்ற பயணம் எனத் தலைப்பிட்டாலும் சரி :)

உறங்கும் மானுடனே உடனே வா, வா! வைரமுத்துவின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன :)

said...

கவித்துவம்

said...

க‌விதை ந‌ல்லா இருக்கு

said...

அதனாலென்ன?
ரசனைகளின் சுதந்திரம்!