தானியமூட்டைகளைத் திடுடித்தின்கையில்
முதன்முதலாய்
செத்துமடிந்தன எலிகள்.
மலையுச்சியில் சரிகின்றன அழுகுரல்கள்.
ஒற்றைப்பனை மரத்தினின்று
தொடர்கின்றன
வேவுபார்க்கும் கண்கள்.
உங்கள் கால்களுக்கடியில்
கிடக்கும் ஒரு பூரானின் பிணத்தைக்
கவனிக்கவியலாது
விரைபவராயிருக்கலாம் நீங்கள்.
நல்லது இப்போது
ஒளிரும் தொலைக்காட்சிப் பெட்டியில்
குலுங்கி விறைத்து
தெறிக்கும் பாப்ப்பாடகியின்
பட்டன்களோடு உங்கள் கண்கள்.
உங்கள் பாப்கார்ன் பொட்டலத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசியெறியுங்கள்
முடிந்தால் ஒரு கோக் டின்னோடு.
உயர்ந்துகொண்டிருக்கிறது விலைவாசி
நீங்கள் இப்போது குனியலாம்
பின்னால் உறுத்தும் துப்பாக்கியின் சமிக்ஞைக்காக.
சமிக்ஞையில் ஒளிரும் கண்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உலகம் வேகமாய் நகர்கிறது. நாம் அதனுடன் சேர்ந்து பயணிப்பதில்லை. அதைவிட வேகமாக ஓடுகிறோம். உங்களின் கருத்து உண்மைதான். என்றாவது நின்று திரும்பி பார்க்கையில் நமக்காக அழுவதற்கு யாருமில்லாமல் தான் இருப்போம். :(
Post a Comment