பிறழ்வு

அவர்கள் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள்.
பீதியூட்டப்பட்ட என்
சிறுபிராயத்தை விடவும்.

மறைபொருட்களின் சாட்சியங்களாய்த்
திறந்தமேனிகளோடு
திரிந்துகொண்டிருக்கிறார்கள் தெருவெங்கும்.

எல்லோருக்குமேயிருக்கிறது
அவர்களிடம்
அச்சத்தோடு கூடியவிலகல்.

சமரசமற்ற அவர்களிடம்
புகையொடு வசவுகளை உதிர்த்தபடி
வாகனங்களே விலகிச்செல்கின்றன.

யாருடனோ சதா சண்டையிடுகிறார்கள்.
யுத்தமுடிவு இதுவரை தெரியவில்லை.

எல்லாவிடங்களிலும்
திறந்தவெளிகளில்
மலங்கழிக்கும் அவர்கள்
மழைகளைத்துளிகளைப்போலவே
சடார் சடாரென்ற அதிர்வுடனே
ஒன்றாய்ப்
பத்தாய்
நூறாய்ப்
பெருகக்கூடும்.
பின் அவர்கள் நாமாகவும்
நாம் அவர்களாகவும்...

2 comments:

Anonymous said...

யாரைப் பற்றி சொகின்றீர்கள்? பத்து, நூறூ திரும்ப வந்துள்ள போலியாரை பற்றியா?

www.doondu.blogspot.com

Anonymous said...

அபத்தமான அபியும், நானும் அற்பவாதம் சமூகத்தைப் பீடித்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியுறும் வேளையில், உண்மையான உணர்ச்சியுள்ள கவிதை நம்பிக்கை தருகிறது.