உறக்கத்தின் மீது படர்ந்து..


புதிதாய் எதுவும் சொல்லப்போவதில்லை
புதிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லையும்கூட.
மீண்டும் மீண்டும்
அடித்தடித்து எழுதப்படுகின்றன பிரதிகள்.
மரங்கள் தங்கள் கனிதவிர்த்து
வேறெதுவும் தருவதில்லை.
ஸ்வஸ்திக் இருள்சூழ்ந்த பிரேதேசத்து இருட்டில்
கதவினிடுக்கின் வழியாய்க் கசிந்த வரிகள்தான்.
நீங்கள் உறங்குகிறீர்கள்..
போபாலில் மூச்சடைத்து இறந்துபோன சிசு
குஜராத்தில் ஓம் செதுக்கப்பட்ட நெற்றிகள்
கயர்லாஞ்சில் பிறப்புறுப்பில் செருகப்பட்ட வாட்கள்
செந்தூரம், தலைப்பாகை, மீசைத்திமிர், லத்திவெறி
இவையேதும் அறியாது உறங்குவது நல்லதே.
உறங்குவது நல்லதுதானே
உங்கள் கதவுகள் தகர்க்கப்படாதவரை

2 comments:

said...

//நீங்கள் உறங்குகிறீர்கள்..
போபாலில் மூச்சடைத்து இறந்துபோன சிசு
குஜராத்தில் ஓம் செதுக்கப்பட்ட நெற்றிகள்
கயர்லாஞ்சில் பிறப்புறுப்பில் செருகப்பட்ட வாட்கள்
செந்தூரம், தலைப்பாகை, மீசைத்திமிர், லத்திவெறி
இவையேதும் அறியாது உறங்குவது நல்லதே.
உறங்குவது நல்லதுதானே
உங்கள் கதவுகள் தகர்க்கப்படாதவரை//

நெஞ்சை உலுக்கிய வரிகள்

said...

படுக்கையில் கூட படர விடாமல் செய்துவிட்டது உங்கள் கவிதை... அதில் எனக்கொன்றும் வருத்தமில்லை.