என்னதாண்டா பெப்சியில இருக்குதப்படி? - அதுக்கு எருமைமாட்டுமூத்திரத்தைக் கப்பில குடிநூற்றாண்டுகளைக் கடந்துவந்திருக்கிறீர்கள்
மீண்டும் திரும்பிப்பார்க்கத் தயாராயில்லாமலேயே.
நியாயம்தான்
கடந்துவந்த நூற்றாண்டுகளின்
ஓலம், அழுகை, கண்ணீர்,
புழுதி, ரத்தம், நிணம்,
வியர்வை என எதுவும் இப்போது தேவையில்லைதான்.
இப்போது சாதரணமாய்க் காணவியலும்
ஒரு புரோட்டாவைக் கொத்தித்தின்று
ஒரு மிடறு பெப்சியருந்துமிளைஞனை.
உங்கள் உற்சாகமான இரவுகளிலும்
விரும்பப்படும் மதுவின்
விரும்பப்படா மணருசி மறைக்க
கலக்கவும் கூடும்.
எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா
அதன் நிறம்
கருக்கலைந்த தாயின்
உதிரத்தின் நிறமொத்திருப்பதை.

7 comments:

said...

தலைப்பிற்கு நன்றி : மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மய்யக்கலைக்குழுவிற்கும் இந்தவரிகளைப் பாடும்போது எங்கிருந்தோ உற்சாகத்தைத் திரட்டிப் பாடும் பெயர்தெரியாத அந்த கருப்புத்தோழனுக்கும்

said...

//அதன் நிறம்
கருக்கலைந்த தாயின்
உதிரத்தின் நிறமொத்திருப்பதை.
//

மாட்டு மூத்திரத்தை (கோமியம்) குடிக்கிற ஜனங்கதானே நம்ம ஜனங்க. இதெல்லாம் உறைக்குமா என்ன?

Anonymous said...

நீங்கள் எதை வேண்டுமானால் குடியுங்கள், வருத்தமில்லை! மற்றபடி கையாலகாதனத்தின் அதிகபட்ச வெளிப்பாடுதான் இந்த பதிவும் குறிப்பாக அதன் தலைப்பும்! நல்ல டாக்டராக பார்த்துவிடுங்கள் - கூடிய சீக்கிரம்!

said...

அப்ப ஓல்டுமங்கு க்கு என்னா மிக்ஸிங்?

said...

நான் எப்போதும் தண்ணீர்தான் அய்யனார்..

said...

//அதன் நிறம்
கருக்கலைந்த தாயின்
உதிரத்தின் நிறமொத்திருப்பதை.
//

அதிரவைக்கும் வரிகள்...

லவடக்கெம்பால். said...

பேண்டு, சட்டைன்னு ஏண்டா போடுறீங்க.

அதுக்கு அம்மணமா கூட திரி.