புணர்ச்சியைப் பற்றிய நான்கு கவிதைகள்

இரவு ஒரு வேசியைப்போல
அவிழ்கிறது
என்கிறான் இவன்.
வேசி ஒரு இரவைப் போல
அவிழ்கிறாள் என்று
திருத்தினேன் நான்.

------------

மிஸ்டர் எக்ஸ் மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
(மிசஸ் எக்ஸ் மிஸ்டர் எக்ஸைப் புணர்வதாய்ச் சொல்வது வழக்கமில்லை)
மிஸ்டர் எக்ஸ் மிசஸ் ஒய்யை நினைத்து
மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
மிசஸ் எக்ஸ் மிஸ்டர் ஒய்யை நினைத்து
மிஸ்டர் எக்ஸுடன் இருக்கிறாள்.
இப்போது படுக்கையறையில்
நான்குபேர் புணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

--------------

புணர்ச்சியைப் பற்றி நூறுகவிதைகள்
எழுதியவன் ஒருமுறைகூட புணர்ந்ததில்லை.
புணர்ச்சிபற்றிப் பேசக்கூடாதென்பவன்
புணர்ந்ததோ லட்சம்தடவைக்கும் மேல்.
புணர்ச்சிபற்றிப் பேசாது புணர்ந்தவனைக்
கவிதையைப் போலப் புணர்ந்தான் என்பதா,
புணராமலே புணர்ச்சிபற்றி எழுதியவனை
கவிதையைப் புணர்ந்தவன் என்பதா?

-----------
நன் இந்தவீட்டில் இவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறேன்.
அவன் அடுத்தவீட்டில் அவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
எங்களிருவர் வீடுகளுக்குமிடையில் சுவர்களிருக்கின்றன.
எங்களிருவர் வீட்டின் சுவர்களுக்குள்ளும் அறைகளிருக்கின்றன.
நான் இவளைப் புணர்வதும்
அவன் அவளைப் புணர்வதும்
எங்களிருவருக்குமே தெரியும்.
ஆனாலும் எங்களிருவரின்வீட்டில்
சுவர்களுமிருக்கின்றன..
அறைகளுமிருக்கின்றன.

10 comments:

said...

வழக்கம்போல கவிதைகள் என் டவுசரை அவிழ்ப்பதால் ஒரு சின்ன ஜோக்!

கேள்வி : வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்ட கொடுமை எது?

பதில் : பாலியல் தொழில் புரியும் ஒரு சேவகரின் ‘அந்த' இடத்தில் சிலந்தி கூடு கட்டுவது!

இந்த ஜோக் சொல்லும் அவலச்சுவையை ஒரு பின்நவீனத்துவ கவிதையாக வடிக்க இயலுமா?

said...

இவையெல்லாமே மிக மிக எளிமையான கவிதைகள். இதுகூடப் புரியவில்லையென்றால் எப்படி? பை தி பை, புணர்ச்சி பற்றிய கவிதைகள் என்றவுடன் நீங்கள் டவுசரை அவிழ்ப்பது நியாயமில்லை. ((-

said...

முருகா..

சோதனை பண்றாங்கடா முருகா..

காப்பாத்து..

said...

//புணர்ச்சி பற்றிய கவிதைகள் என்றவுடன் நீங்கள் டவுசரை அவிழ்ப்பது நியாயமில்லை. ((-//

டவுசர் அவுக்காமல் புணர்வது எப்படி? என்று ஒரு பதிவு போடமுடியுமா?


//புணர்ச்சியைப் பற்றி நூறுகவிதைகள்
எழுதியவன் ஒருமுறைகூட புணர்ந்ததில்லை.//

அய்யா! உங்கள் கவிதைகளில் தற்புகழ்ச்சியை முதல் தடவையாக காண்கிறேன் :-)

BTW, இன்றைக்கு இங்கே கும்ப அனுமதியுண்டா?

said...

lucky, o yes!

said...

கடைசி கவிதை ரெம்ப அருமையான ஒரு உணர்வைத் தருது. திடீர்னு ஒரு விடுமுறை நாளில் நம்ம வீட்டில் இயல்பாய் இருக்கையில் நமக்கெல்லாம் தெரியாமல் நம் வீட்டுச் சுவர்கள் இல்லாமல் போனால்....?

said...

முதல் கவிதை ம்ஹூம்.
இரண்டாவது சாதாரண அறிக்கை.
மூன்றாவது சுய புலம்பல் :)
நான்காவது கொஞ்சம் பரவாயில்லை :)

தீர்ப்பை மாத்தச் சொல்ல மாட்டீங்க இல்ல :)

said...

அது இருக்கட்டும் எனது நண்பர் சுகுணா திவாகர் என ஒருவர் போன் செய்தால் எடுப்பதில்லை ரொம்ப அசட்டை அவருக்கு ஒரு கவிதை கிடைக்குமா

said...

//மிஸ்டர் எக்ஸ் மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
(மிசஸ் எக்ஸ் மிஸ்டர் எக்ஸைப் புணர்வதாய்ச் சொல்வது வழக்கமில்லை)
மிஸ்டர் எக்ஸ் மிசஸ் ஒய்யை நினைத்து
மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
மிசஸ் எக்ஸ் மிஸ்டர் ஒய்யை நினைத்து
மிஸ்டர் எக்ஸுடன் இருக்கிறாள்.
இப்போது படுக்கையறையில்
நான்குபேர் புணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.//


சில வருடங்களுக்கு முன் குமுதம் அரசு பதில்களில் படித்த யாரோ ஒரு கவிஞருடைய கவிதையின் மேற்கோள் நினைவுக்கு வந்தது, 'இன்று தமிழகத்தின் பெரும்பாலான படுக்கையறைகளில் அஜித்தும் சிம்ரனும்தான் புணர்கிறார்கள்'.

said...

பா ரா தளத்தின் சுட்டியை தொடர்ந்து உங்கள் தளத்திற்கு வந்தேன்! சுகுணாதிவாகர் உங்கள் கவிதைகள் யாவும் அருமை!