Homonculus அல்லது (லக்கிலுக், உ.தமிழன் போன்றவர்களுக்குப்) புரிகிறமாதிரி ஒருகவிதை













எனக்குள் நீ
உனக்குள் நான்.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள் நான்.
உனக்குள்ளிருக்கும்
எனக்குள் நீ.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
நான், நீயெனில்
எனக்கும் உனக்கும்
ஏது இடைவெளி?

22 comments:

said...

”Homonculus அல்லது லக்கிலுக், உ.தமிழன் போன்றவர்கள்”னா என்ன அர்த்தம்? :-(

உங்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கலாமா?

said...

இடைவெளி இருப்பதாக யார் சொன்னது.?

said...

//எனக்குள் நீ
உனக்குள் நான்.//

முருகனும், சைத்தானும் உனக்குள்ளும் இருக்கிறான். எனக்குள்ளும் இருக்கிறான்..

//எனக்குள்ளிருக்கும்
உனக்குள் நான்.//

அப்படியிருக்கும்போது எழுதியதுதான் 'கலகக்காரனின் குரல்' என்ற காலத்தால் அழிக்க முடியாத சுகுணா திவாகரின் கட்டுரை.

//உனக்குள்ளிருக்கும்
எனக்குள் நீ.//

இதனால்தான் நான் எப்போதும் அது போன்ற நல்லவைகளையே சுகுணாவிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

//எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்//

முருகனை மட்டும் வெளிப்படுத்துவோம்.

//எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்//

முந்தின கவிதை மாதிரி எழுத வைக்கும் சைத்தானை வெளியேற்று சுகுணா..

//நான், நீயெனில்//

சத்தியமா நான்தான் நீ.. நீதான் நான்.. முருகன்தான் நீ.. இன்னொரு முருகன்தான் நான்..

//எனக்கும் உனக்கும்
ஏது இடைவெளி?//

இப்ப யார் சாமி இடைவெளி இருக்கிறதா சொன்னது?

எப்பவும் சுகுணாதான் சரவணன்.. சரவணன்தான் சுகுணா..

புரிஞ்சதா..?

said...

உண்மைத்தமிழா, உங்கள் பின்னூட்டத்தைப் படித்த்வுடன் ஆசிரியன் செத்துவிட்டான், (தற்கொலை செய்துகொண்டு)

said...

ஆனால் பிரதி மாத்திரம் உயிர்த்தெழுந்து வந்து எனக்குள் நீ உனக்குள் நான் என ஆட்டம் போடுகிறது :)

said...

அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களின் பின்னூட்டம் சூப்பர்!

அவர் ஒரு சீத்தலைச் சாத்தனார் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

தாவூ தீருது சாமி! :-(

said...

//சுகுணாதிவாகர் said...
உண்மைத்தமிழா, உங்கள் பின்னூட்டத்தைப் படித்த்வுடன் ஆசிரியன் செத்துவிட்டான், (தற்கொலை செய்துகொண்டு)//

சிரித்து, சிரித்து ஓய்ந்துபோய்விட்டேன் சுகுணா..

ஆனாலும் இது போன்ற வார்த்தைகளை எதற்காகவும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது..

said...

//லக்கிலுக் said...
அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களின் பின்னூட்டம் சூப்பர்! அவர் ஒரு சீத்தலைச் சாத்தனார் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். தாவூ தீருது சாமி! :-(//

தேங்க்ஸ்டா ராசா..

அப்பப்ப நீயும் எல்லா இடத்துக்கும் போய் டைம் பாஸ் பண்ண வைக்குற..

பொழுது நல்லாப் போகுது..

ஆனா இந்த 'தாவூ தீருது.. டிரவுசர் கிழியுது'ன்ற டயலாக்கை மட்டும் விட்டுடேன்.. கேட்டுக் கேட்டுச் சலிச்சுப் போச்சு..

said...

//சுகுணாதிவாகர் said...
உண்மைத்தமிழா, உங்கள் பின்னூட்டத்தைப் படித்த்வுடன் ஆசிரியன் செத்துவிட்டான், (தற்கொலை செய்துகொண்டு)
//



கவிதை தென்னங்கள் என்றால் அண்ணன் உண்மைத்தமிழனின் கவிதை "தென்னமர மாத்திரை" நியாயமாய் "ஆசிரியன்" தற்கொலைபடையாய் மாறி குண்டு கட்டி அண்ணன் உண்மையாரை சிவலோக பிராப்திக்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும்

said...

///ஆனா இந்த 'தாவூ தீருது.. டிரவுசர் கிழியுது'ன்ற டயலாக்கை மட்டும் விட்டுடேன்.. கேட்டுக் கேட்டுச் சலிச்சுப் போச்சு..///

”கோவணம் அவிழுது” ஓகேவா?

Anonymous said...

//ஆனா இந்த 'தாவூ தீருது.. டிரவுசர் கிழியுது'ன்ற டயலாக்கை மட்டும் விட்டுடேன்.. கேட்டுக் கேட்டுச் சலிச்சுப் போச்சு..//

பெர்னார்ட்ஷா போன்ற மேதைகளின் மேற்கோள் காட்ட பயன்படும் பொன்மொழிகளைப் போல, வலைப்பதிவுலகில் அழியாப் புகழ் பெற்று நிலைபெற்றுவிட்ட "லக்கிலுக்" அவர்களின் இந்த வாசகத்தைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டீர்களே.

இந்த உலகில் டவுசர் இல்லாமல் போனாலும், தாவு தீர்ந்துபோனாலும் இவ்வரிகளிலுள்ள பின்னவீனத்துவ கூறுக்காக இது நிலைத்து நிற்கும்

said...

'தாவூ தீருது.. டிரவுசர் கிழியுது'

said...

உண்மைத் தமிழன்!நீங்கள் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல; தமிழ்மணத்திற்குள் 'யோனி', 'புணர்ச்சி'போன்ற வார்த்தைகளும் அதிகப்படியாகப் பிரயோகிக்கப்பட்டு அலுப்பூட்டுகின்றன. காலையில் கேட்ட பாட்டை அந்த நாள் முழுவதும் யாரோ அனத்துவது போல கடுப்பாக இருக்கிறது. யாராவது காப்பாத்துங்க.

said...

//வரவனையான் said...
கவிதை தென்னங்கள் என்றால் அண்ணன் உண்மைத்தமிழனின் கவிதை "தென்னமர மாத்திரை" நியாயமாய் "ஆசிரியன்" தற்கொலை படையாய் மாறி குண்டு கட்டி அண்ணன் உண்மையாரை சிவலோக பிராப்திக்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும்//

ஆஹா.. இந்த வயதில் சிவலோக பிராப்தி அடைவதற்கு ரொம்ப, ரொம்பக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மப்பு மாப்ளை.. உடனே 'ஆசிரியரிடம்' சொல்லி குண்டு கட்டி வரச் சொல்லவும்..

இந்த 'பின் நவீனத்துவ முருகன்' கையால்தான் என் சாவு எனில், எனக்கு இதைவிட பெரிய பெருமை வேண்டுமா என்ன?

said...

///லக்கிலுக் said...
///ஆனா இந்த 'தாவூ தீருது.. டிரவுசர் கிழியுது'ன்ற டயலாக்கை மட்டும் விட்டுடேன்.. கேட்டுக் கேட்டுச் சலிச்சுப் போச்சு..///
”கோவணம் அவிழுது” ஓகேவா?///

பாவி.. டிரவுசருக்குள்ளேயும் கோவணமா? எப்படிப்பா தாங்குற..?

said...

//தமிழ்நதி said...
உண்மைத் தமிழன்!

நீங்கள் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல; தமிழ்மணத்திற்குள் 'யோனி', 'புணர்ச்சி'போன்ற வார்த்தைகளும் அதிகப்படியாகப் பிரயோகிக்கப்பட்டு அலுப்பூட்டுகின்றன.

காலையில் கேட்ட பாட்டை அந்த நாள் முழுவதும் யாரோ அனத்துவது போல கடுப்பாக இருக்கிறது. யாராவது காப்பாத்துங்க.//

யார் காப்பாத்தறது மேடம்..? அதான் 'மப்பு மாப்ளை' கொலை பண்றான்னுட்டாரு பாருங்க.. இந்த மாதிரி வெறி கொண்ட 'ரசிகர்கள்' இருக்கிறவரைக்கும், இந்த மாதிரி 'ஆசிரியர்கள்' இருக்கிறவரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது..

said...

//ஆசிரியன் செத்துவிட்டான்,//

எழுதி முடித்த உடன் ஆசிரியன் செத்து விட்டான்.
அதன் பின் இங்கிருப்பது ஒரு வாசகன் மட்டும் தான்.
அப்பொழுது தான் எழுதியவர் அவர் கவிதையையே விமர்சிக்க முடியும்

வால்பையன்

said...

கடந்த பல வருடங்களுக்கு பின்பு, எனக்கு புரிந்த மாதிரி தெரிந்த புரியாத கவிதை.

வலையைக் கூட, குட்டி சுவராய்த்தான் பயன்படுத்துகிறீர்கள்.

வலையும், நாடும் நாசமாய் போகட்டும்.

எல்லாம் இரண்டு வருசம் தான். உலகம் அழியத்தான் போகுது.

said...

தோழர் வரவனையான்

வார்த்தைக்கு வார்த்தை குண்டு கட்டும் மேட்டரைப்பற்றியே பேசிக் கொண்டிருக்காதீர்கள். ஏற்கனவே அல்லக்கை என்ற பேர் நமக்கிருக்கின்றது. திராவிட பதிவர்கள் முண்ணயில் தமிழ்மணத்தில் இருப்பது பார்ப்பனீயத்தை ஒழித்து விட்டு திராவிட கேப்மாரிகள் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அதிகாரத்தை மீட்க வேண்டும் என்று ஒரு கும்பல் புறப்பட்டிருக்கின்றது.

போதாக்குறைக்கு நான் குண்டு கட்டும் மேட்டர் பிரச்சனையில் இருக்கிறது. தீவிரவாதத்தை ஊக்கிவிப்பதாக விவாதம் நடந்துக் கொண்டிருக்கின்றது. நீர் வேறு இப்படி சொல்கிறீரே! திராவிடம் என்ற பேர் போய் தீவிரவாதம் என ஆகிவிடப்போகிறோம்

said...

//எனக்குள் நீ
உனக்குள் நான்.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள் நான்.
உனக்குள்ளிருக்கும்
எனக்குள் நீ.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
நான், நீயெனில்
எனக்கும் உனக்கும்
ஏது இடைவெளி?
//

நல்ல கவிதை சுகுணா!

சூப்பர்!

ஐ லைக் திஸ்!

said...

//ஏற்கனவே அல்லக்கை என்ற பேர் நமக்கிருக்கின்றது. //

உங்களையும் அல்லக்கை ஆக்கிட்டானுங்களா?

என்ன கொடுமை தோழர் இது? :-(

said...

எனக்கு எல்லா பின்னூட்டமும் பிடிச்சுருக்கு. :)))