இறக்கைகள் அறுந்து வீழ்ந்த
தேவதை ஒருத்தியை
எடுத்து வளர்த்தேன்.
நிலவின் சுவர்களில்
எழுதப்பட்ட பாடல்களைப்
பாடிக்காட்டுவாளெனக்கு.
காலை எழுகையில்
மார்புக்காம்புகளில்
பனியொத்த முத்தமீவாள்.
செடிகளில் பட்டாம்பூச்சிகள்
பறித்துத் தருகிற அவளை
வலுக்கட்டாயமாய்ப்
படுக்கையில் தள்ளி
குறியைத் திணித்தபோதுதான்
பார்த்தேன்
அவள் யோனியில்
முளைத்திருந்தது
குறுவாளொன்று.
யோனியில் முளைத்த குறுவாள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த கவிதையெல்லாம் இப்படி பொத்தபொதுவா தமிழ் மணத்துல போடுறது நல்லாவா இருக்கு. வேனும்னா இதுக்கென்றே தனியா இருக்கிற காமலோகத்திற்க்கொ போங்கலேன்.
//அவள் யோனியில்
முளைத்திருந்தது
குறுவாளொன்று.//
குறியின் கதி???? :-(((((((
:)
சிறப்பான பி.ந.கவிதை. சிலநாட்களாக காணக்கிடைக்காததால் நானும் பொட்டீக்கடையும் நொந்துபோயிருந்தோம். ஹும்ன்.
Post a Comment