ஆதியில் இருந்தது இப்போது இல்லைவிலக்கப்பட்ட கனியைப் போல
அந்தரத்தில் தொங்குகிறது பூமி.
தேசங்களின் வரைபடங்களின் மீது
கள்ளத்தனமாய் ஊர்கிறது
கரும்புகை சர்ப்பமொன்று.
பச்சைக்கண்கள் மினுமினுக்க
காலத்தைப் போலவே அசையும்
பாம்பின் வயிறு
நூற்றாண்டுக்கால இரை விழுங்கி
புடைத்திருக்கிறது.
சமயங்களில் அதன் தாகம் தணிக்க
கடல் எழுந்துவந்து
நாவை நக்கிச் செல்கிறது.
கொலைவாள் போல
சுற்றிச்சுழலும்
பாம்பின் நாக்கு
சூரியனை விழுங்குவதற்கான எத்தனத்திற்கானது.
இப்போது ஏதேனும் தேச வரைபடத்தை உருவி
நம் நிர்வாணம் மறைக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் இது முதல் பாவமல்ல.

       


4 comments:

said...

தேசங்களின் வரைபடங்களின் மீது
கள்ளத்தனமாய் ஊர்கிறது
கரும்புகை சர்ப்பமொன்று///

மிக அருமை சுகுணா சார்..எல்லைக்கோடுகளை கரும்புகை சர்ப்பமாக உருவகித்தது. பின் கடல் கொண்டு எல்லைகள் அழிப்பதும் ..

said...

sameeba kaalangalil vaasiththu ariyaatha

arputhamaana,nunukkamaana visayangaludan veeriyamaana kavithai

inrilirunthu naan ungal vaasagan


nanri

ARK>Rajaraja

said...

மிக அருமை. தங்களது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா ???

said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள். தேசவரைபடங்களின் மீதாய் ஊர்கிற சர்பங்கள் நிறைந்துகொண்டே/