வெளியில்......



முதல்நாள் சந்தித்தநீ

இல்லை நீ.

நீ முதல்நாள்

சந்தித்தநானுமில்லை நான்.

யாருமிங்குமில்லைமுதல்நாள்

சந்தித்த யாருமாய்.

சூரியனை விழுங்கிய

அலைகரைதட்டிப் போகிறது.

காத்திருப்போம் நாம் இனி வரும்

முதல்நாளுக்காகவும்

எதிர்ப்படும் முதல்நபருக்காகவும்.

3 comments:

said...

//காத்திருப்போம் நாம் இனி வரும்
முதல்நாளுக்காகவும்
எதிர்ப்படும் முதல்நபருக்காகவும்.//

அய்யோ.. கவிதை எழுதாதீங்க இனிமே.. தாங்க முடியல.

Anonymous said...

//யாருமிங்குமில்லைமுதல்நாள்
சந்தித்த யாருமாய்.//

என்ன வரிங்க இது....அப்பப்பா....

said...

//காத்திருப்போம் நாம் இனி வரும்
முதல்நாளுக்காகவும்
எதிர்ப்படும் முதல்நபருக்காகவும்.//

வாழ்வியல் எதார்த்தமும்
அதற்கான அவசியமும்
விட்டு செல்கின்ற‌ன
சில காயங்களையும்
சில அழ‌கான ஆழமான‌ கவிதைகளையும்..


வாழ்த்துகள்