வாஷ்பேசினில் மிதந்து கொண்
டிருக்கின்றன சிகரெட்துண்டுகள்.
மலமெங்கும் மதுநாற்றம்.
சதா முணுமுணுக்கும்
தகப்பனின் கழுத்தை
நெறிக்கவேண்டுமாயிருக்கிறது.
குறிமுனையில்
சிகரெட்டை நசுக்கவேண்டும்.
சன்னல்வழி வெறித்துப் பார்க்கிறேன்
பெண்நாயின் குதத்தை
முகர்ந்து பார்க்கிறது ஆண்நாய்.
ஆண்விடாய்
Posted by சுகுணாதிவாகர் at 0 comments
யோனியில் முளைத்த குறுவாள்
இறக்கைகள் அறுந்து வீழ்ந்த
தேவதை ஒருத்தியை
எடுத்து வளர்த்தேன்.
நிலவின் சுவர்களில்
எழுதப்பட்ட பாடல்களைப்
பாடிக்காட்டுவாளெனக்கு.
காலை எழுகையில்
மார்புக்காம்புகளில்
பனியொத்த முத்தமீவாள்.
செடிகளில் பட்டாம்பூச்சிகள்
பறித்துத் தருகிற அவளை
வலுக்கட்டாயமாய்ப்
படுக்கையில் தள்ளி
குறியைத் திணித்தபோதுதான்
பார்த்தேன்
அவள் யோனியில்
முளைத்திருந்தது
குறுவாளொன்று.
Posted by சுகுணாதிவாகர் at 5 comments
Subscribe to:
Posts (Atom)